ஸ்டாலின் – தினகரன் கூட்டணி ஆட்சி: சுப்பிரமணியம் சுவாமி தகவல்

ஸ்டாலின் – தினகரன் கூட்டணி ஆட்சி: சுப்பிரமணியம் சுவாமி தகவல்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதில் திமுகவும், தினகரன் அணியும் ஒருமித்த கருத்தை கொண்டிருப்பதால் இருவரும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்த வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘”ஸ்டாலினும், தினகரனும் கூட்டணி சேர்ந்து, இன்னும் சில நாள்களில் ஆட்சியமைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

திமுகவுக்கு தற்போது 89 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர். இந்த 98 எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆதரவாளர்கள் 23 பேர் இணைந்தால் ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply