100 என்றால் அவசர போலீஸ், 108 என்றால் ஆம்புலன்ஸ், 110 என்றால் ஜெயலலிதா. மு.க.ஸ்டாலின் கிண்டல்

100 என்றால் அவசர போலீஸ், 108 என்றால் ஆம்புலன்ஸ், 110 என்றால் ஜெயலலிதா. மு.க.ஸ்டாலின் கிண்டல்
mk stalin
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக நமக்கு நாமே’ என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம்  கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தற்போது தேனி மாவட்டம் வந்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் நேற்று பேசிய மு.க.ஸ்டாலின், “100 என்றால் அவசர போலீஸ், 108 என்றால் ஆம்புலன்ஸ் அதேபோல் 110 என்றால் ஜெயலலிதா என கிண்டலாக பேசினார்.

மேலும் ‘இப்போது நடக்கும்…இல்லை, நின்று கொண்டிருக்கும்… இல்லை, உட்கார்ந்திருக்கும், இல்லை, படுத்திருக்கும்…இல்லை,  அமுங்கிய நிலையில் இருக்கும்..இல்லை, கோமா  நிலையில் இருக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான விடியலை நோக்கித்தான் இந்த பயணம்” என்று கூறினார்.

மேலும் கம்பம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சென்றபோது ஒரு விவசாயி அவரை சந்தித்து, ‘கடந்த ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல, நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply