ஜெயலலிதாவை சவாலுக்கு அழைக்கும் ஸ்டாலின், அன்புமணியை தவிர்ப்பது ஏன்?

ஜெயலலிதாவை சவாலுக்கு அழைக்கும் ஸ்டாலின், அன்புமணியை தவிர்ப்பது ஏன்?

02stalin1பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஜெயலலிதாவை அதிகம் தாக்குவது மு.க.ஸ்டாலினைத்தான் என்பது அவரது தேர்தல் பிரச்சாரத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மு.க.ஸ்டாலினை அவர் நேருக்கு நேர் விவாதம் செய்ய வருமாறு பகிரங்க அறிவிப்பு தெரிவித்துள்ளார். அன்புமணியை ஒரு தலைவர் என்று மதிக்காத காரணத்தாலோ, அல்லது அன்புமணியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய பயம் என்ற காரணத்தாலோ தெரியவில்லை இதுவரை அந்த பகிரங்க சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் பகிரங்கமாக விவாத அறிவிப்பு கொடுத்தவரை விட்டுவிட்டு, நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவை நேருக்கு நேர் விவாதம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதா வரமாட்டார் என்ற தைரியத்தில் அழைத்தாரா? அல்லது உண்மையிலேயே விவாதம் செய்ய அழைத்தாரா? என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.

திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்: ”கடந்த 2011 தேர்தலின்போது ஜெயலலிதா 54 வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சியின்போது 110-வது விதியின் கீழ் 600-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், எந்த தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து திருவண்ணாமலையிலோ அல்லது வேறு பொது மேடையிலோ ஜெயலலிதா என்னோடு விவாதிக்க தயாராக உள்ளாரா? நான் அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply