போட்டியின்றி தேர்வு செய்யப்படும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்
திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்புமனு செய்யப்பட்ட நிலையில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த இரண்டு பதவிகளுக்கு இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை, வரும் 28ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில், திமுக பொது செயலாளர் அன்பழகன் அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.