காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் தான் குற்றவாளி: தமிழிசை செளந்திரராஜன்

காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் தான் குற்றவாளி: தமிழிசை செளந்திரராஜன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி முழு அடைப்பு நடத்தவுள்ளதாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த முழு அடைப்புக்கு அதிமுக, பாஜக உள்பட மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் காவிரிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் காவிரி விவகாரத்தில் குற்றவாளிகள் தான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply