ஸ்டாலின் முதல்வர், விஜயகாந்த் துணை முதல்வர். உருவாகிறது திமுக+தேமுதிக+பாஜக கூட்டணி
சுப்பிரமணியன் சுவாமியின் ஒரே ஒரு டுவீட் தமிழக அரசியலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட திமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் அடுத்தகட்டமாக தொகுதிகளை பிரிக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுக வட்டாரத்தில் இருந்து வரும் தகவலின்படி திமுக 135 தொகுதிகள், தேமுதிக 50 தொகுதிகள், பாஜக 35 தொகுதிகளிலும், உதிரிக்கட்சிகள் மீதியுள்ள 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிகிறது.
திமுக கூட்டணியில் பாஜகவை இணைக்க திமுக மேலிடத்தலைவர்கள் தயங்கியதாகவும், ஆனால் பாஜகவை இணைத்தால் மட்டுமே தேமுதிக, திமுக கூட்டணியில் இடம்பெறும் என பேரம் பேசியதால் வேறு வழியின்றி திமுக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாஜகவை கூட்டணியில் இணைத்தால் திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் 2ஜி வழக்கு மற்றும் ஏர்செல் மாக்சிஸ் வழக்கு ஆகிய வழக்குகளின் முடிவுகள் சாதகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பண்டார கட்சி, பரதேசி கட்சி என்று திமுக தலைவரால் வர்ணனை செய்யப்பட்ட பாஜக தற்போது தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சியாக மாறும் வாய்ப்பு உள்ளது. மேலும் திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராகவும், விஜயகாந்த் துணை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.