கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் இல்லாத திமுக ஆட்சி. ஸ்டாலின் உறுதி

கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் இல்லாத திமுக ஆட்சி. ஸ்டாலின் உறுதி
stalin
மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்த ‘நமக்கு நாமே’ பயணம் இரண்டு கட்டங்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது. நேற்று  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பஜாரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் அங்குள்ள வியாபாரிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் ஜோலார் பேட்டை பால்நாங்குப்பம் கூட்டுச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் அவர் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி செட்டியப்பனூர் ஈத்கா மைதானத்துக்கு வந்த ஸ்டாலின், அங்கு ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் காளை உரிமையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காளை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தபோது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்

இதையடுத்து ஆம்பூரில் தோல் தொழிற்சாலை அதிபர்களைச் சந்தித்து அவர்கள் முன் பேசிய ஸ்டாலின், ‘கடந்த திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு தவறுகள் நடத்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த முறை தவறே நடக்காது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தமிழகத்தில் கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் இல்லாத ஊழலற்ற ஆட்சியை திமுக வழங்கும். தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.

English Summary: Stalin promise for commission, collection and corruption less rule.

Leave a Reply