பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மறியல் போராட்டம்: ஸ்டாலின், வைகோ கலந்து கொண்டனர்
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் திமுக மறியல் போராட்டம் நடத்துவதால் காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பஸ் கட்டணம் ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. இருப்பினும் முழுமையாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை முதல் திமுக போராட்டம் நடத்தி வருகிறது.
சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், சைதாப்பேட்டையில் வைகோ ஆகியோர் சாலையில் அமர்ந்து மறியல் செய்வதால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் திமுகவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்,.