பஸ் கட்டண உயர்வு போராட்டம் இன்றும் தொடருமா?
பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி அறிவித்தது. ஆனால் ஒன்பது நாளாக எதிர்க்கட்சிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்று போராட்டத்தை தொடங்கியுள்ளனா.
அதிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை முடிந்த பின்னர் திங்கட்கிழமை பரபரப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு பொதுமக்கள் கிளம்பும் சமயம் சரியாக ஒன்பது மணிக்கு சாலையில் உட்கார்ந்து தங்கள் போராட்டத்தை ஆரம்பித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர் எதிர்க்கட்சியினர். இது பஸ் கட்டண உயர்வை விட கொடுமையானது என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில் ‘பஸ் கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்யும் வரை, அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்,” என, தி.மு.க., செயலர் தலைவர், ஸ்டாலின் கூறியிருப்பது மக்களை மேலும் அச்சமடைய செய்துள்ளது. பொதுமக்களுக்காக போராடும் ஸ்டாலின் எண்ணம் உயர்ந்தது என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அவரது போராட்டம் இருந்தால் மக்களின் ஆதரவையும் பெற முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது