ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது: மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது: மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுனர் உரையாற்றியபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 111 எம்.எல்.ஏக்கள் உள்ள மைனாரிட்டி அதிமுக அரசின் அறிக்கையை ஆளுனர் வாசிப்பது மரபல்ல என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

இந்த நிலையில் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், ‘ஆளுநர் உரையில் தமிழக அரசின் கடன் சுமை குறித்து எதுவும் இல்லை. அரசுக்கு வருவாய் குறைந்துள்ளதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள். வருவாய் இல்லாத போது, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும்? எனவே ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது’ என்று கூறினார்.

சமீபத்தில் ஆர்.கே.நகர் மக்களிடம் ரூ.20 டோக்கன் கொடுத்த தினகரன் தரப்பினர் பின்னர் பணத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக வெளிவந்த செய்தியை குத்திக்காட்டும் வகையிலும் ஸ்டாலின் இந்த வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது.

Leave a Reply