தமிழக ஆய்வு குறித்து கவர்னரிடம் நேரில் விளக்கம் கேட்ட ஸ்டாலின்

தமிழக ஆய்வு குறித்து கவர்னரிடம் நேரில் விளக்கம் கேட்ட ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தமிழக கவர்னர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருவது தெரிந்ததே. இந்த ஆய்வுக்கு ஆளும் அதிமுக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றாலும் திமுக, ஆளுனருக்கு கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழகத்தில் ஆய்வு செய்வது குறித்து நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின் விளக்கம் கேட்டதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருக்கும் நிலையில், சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக ஆய்வு செய்யவது முறையா? என ஆளுநரிடம் கேள்வியை எழுப்பினோம். இதனால்தான் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் மேற்கொண்டு வருகிறோம் என்றோம். ஆளுநர் பதில் அளிக்கையில், ஆய்வு பணியை மேற்கொள்ளவில்லை, வளர்ச்சியை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றுதான் செய்கிறேன் என்றார். அப்போது அதிமுக ஆட்சி இல்லையென்றால் ஆய்வு செய்யுங்கள், ஆனால் ஆட்சி ஒன்று நடக்கும் போது ஆய்வு எப்படி செய்யலாம் என கேள்வியை எழுப்பினோம். இதுதொடர்பாக அழுத்தமாக கேள்வி எழுப்பட்ட போது, ஆய்வு செய்வதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply