எதையும் கண்டுகொள்ளாத உதவாக்கரை அரசு: மு.க.ஸ்டாலின்

எதையும் கண்டுகொள்ளாத உதவாக்கரை அரசு: மு.க.ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசின் ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் சுயநல போக்குடன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘இந்த அரசு எந்த ஊழலையும் கண்டுகொள்ளாமல், உதவாக்கரை அரசாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போதைய ஆட்சி குதிரைப் பேரத்தால் நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் ஆனாலும் சரி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதானாலும் சரி, எதையுமே இந்த ஆட்சி கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் மருத்துவத்துறை உயிரை பறிக்கக்கூடிய வகையில் செயல்படுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட போது, அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதை மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தினார்.

Leave a Reply