பாஜகவை வீழ்த்த இன்னொரு சுதந்திர போராட்டம். கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் சூளுரை

பாஜகவை வீழ்த்த இன்னொரு சுதந்திர போராட்டம். கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் சூளுரை

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்றத்தில் அவர் பணியாற்றிய 60 ஆண்டுகள் நிறைவு விழா நேற்று பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்த் உள்பட பல தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

இந்த விழாவின் நாயகர் கருணாநிதி இங்கே இருந்திருக்க வேண்டும். அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தோம். உடல்நிலை தேறிவரும் நிலையில் வெளியில் அழைத்துச் சென்றால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறியதால் அவரை அழைத்து வர முடியவில்லை. திமுகவை தொடர்ந்து கருணாநிதி வழி நடத்துவார்.

இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிக்கப்படுவதையே நாங்கள் எதிர்க்கிறோம். நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே இன்று நம்முன் உள்ள சவால். பாஜக ஆட்சிக்கு எதிராக இன்னொரு சுந்தந்திரப்போராட்டத்திற்கு தயார் என்பதை உணர்த்தவே இந்த விழா

தேர்தலின் போது கருப்புப் பணத்தை மீட்டு வங்கியில் செலுத்துவோம் என்பது உள்பட பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. நாட்டை காவிமயமாக்க காய்களை நகர்த்தி வருகிறது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்

Leave a Reply