நமது உடனடி இலக்கு இதுதான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நமது உடனடி இலக்கு இதுதான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதி தினந்தோறும் தொண்டர்களுக்கு முரசொலியில் கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது புதிய தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களும் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் எப்போது வந்தாலும், நமது இலக்கை நிறைவேற்ற தயாராக இருக்குமாறு தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி என்பதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என சுட்டிக்காட்டி உள்ள அவர், தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.க ூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவோரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என திட்டவட்டமாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இணைந்து பணியாற்றி, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply