மு.க.ஸ்டாலின் – வைகோ சந்திப்பு. தேர்தல் கூட்டணியா?

stallin and vaikoபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேத்தி திருமண நிகழ்ச்சியில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறும்போது, ”ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும், அதற்கான நேரம் இது இல்லை என்றும் ஒருவேளை ம.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி அடைவேன்” என்றும் கூறி இருந்தார்.

மேலும் ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு  அரசியல் நாகரீகத்திற்கு எடுத்துக்காட்டு என்று வைகோ கூறினார். திருமணத்தில் கலந்துவிட்டு தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள மதுரை புறப்பட்

இதேபோல், தேவர்குரு பூஜை விழாவில் கலந்துகொள்ள புறப்பட்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தி.மு.க., பா.ம.க. உடனான கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரியும்” என்றார்.

Leave a Reply