தோல்விக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந்தது உண்மைதான். கருணாநிதி

8தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்யப்போவதாக நேற்று மாலை முதல் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திகளை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யப்போவதாக ஸ்டாலின் என்னிடம் கூறியது உண்மைதான் என்றும், ஆனால் தான் கூறிய அறிவுரைகளை ஏற்று தனது மனதை மாற்றிக்கொண்டார் என்றும் கருணாநிதி நேற்று இரவு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தோல்வி குறித்து மிகவிரைவில் தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூடி,  ஆய்வு செய்யும் என்று கூறிய கருணாநிதி அழகிரி விலகலுக்கும் திமுகவின் தோல்விக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றார்.

ஸ்டாலின் ராஜினாமா செய்வதுபோல் நாடகம் ஆடியுள்ளதாக அழகிரி கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, அவரை பற்றி இனியும் தான் எதுவும் பேசவிரும்பவில்லை என்றும், அவரை மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது என்றும் கூறினார்.

ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளிவந்ததும் ஸ்டாலின் வீட்டிலும் கருணாநிதி வீட்டிலும் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் குவிந்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்கியதில் 2 கேமராக்கள் உடைந்ததாகவும் கூறப்படுகிறாது.

Leave a Reply