10 ஆயிரம் அகதிகளுக்கு வேலை. டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்க நிறுவனம்
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு உலகெங்கிலும் இருந்து டிரம்புக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது நிறுவனத்தின் கிளைகளுக்கு அகதிகளை பணியில் அமர்த்த இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் அகதிகளுக்கு நாடு முழுவதிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ ஹோவார்ட் சுஹுல்ஜ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அமெரிக்காவில் இருந்தும் உலகெங்கிலும் இருந்து டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.