15 வயது சிறுவன் மீது பாலியல் புகார் கூறிய பிரபல நடிகை. திடுக்கிடும் தகவல்

kushiபிரபல தெலுங்கு நடிகை ஒருவர் 15 வயது சிறுவன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் பிரபலமாக இருக்கும் குஷி முகர்ஜி என்ற நடிகை தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு போபால் அருகே தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போபால் நகரில் உள்ள எம்பி நகர் என்ற பகுதியில் அமர்விலாஸ் என்ற ஓட்டலில் நடிகை குஷி முகர்ஜி தங்கியிருந்தார். கடந்த வெள்ளி இரவு ஓட்டலில் அறையின் கதவை மூடாமல் தனியாக தூங்கி கொண்டிருந்த நடிகையிடம் அந்த ஓட்டலில் பணிபுரியும் 15 வயது சிறுவன் தவறாக நடந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை அந்த சிறுவனை கன்னத்தில் பளாரென அடித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகை சிறுவனை அடிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்ததாகவும் இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் போலீஸார் ஓட்டல் சிறுவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஓட்டலின் மேனேஜர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘கடந்த வெள்ளி இரவு நடிகை போதை அதிகமானதால் கதவை மூடாமல் தூங்கிவிட்டதாகவும், அந்த சிறுவன் எங்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்துவிட்டு நடிகையை எழுப்பி கதவை மூடிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். ஆனால் நடிகை அரைகுறை போதையில் தூக்கத்தில் இருந்து எழுந்து அடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply