பாரத ஸ்டேட் வங்கியில் 2393 அதிகாரி பணி

sbi

அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probationary officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CRPD/PO/2015-16/02

நிறுவனம்: State bank of India (SBI)

மொத்த காலியிடங்கள்: 2000 + 393

பணி: Probationary officer (PO)

பிரிவு வாரியான காலியிடங்கள் விரம்:

SC – 308

ST – 339

OBC – 541

GEN – 812

Backlog Vacancies:

SC – 67

ST – 219

OBC – 107

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 01.09.2015 தேதிக்கு முன்பு  தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1985 முதல் 01.04.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:02.05.2014

மேலும் சம்பளம், தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/documents/44978/7348676/SBIPO-2015-Full+English+Advertisement.pdf/fa1e559b-0504-4df6-9d11-534790f1dd95 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply