மளிகை கடையாக மாறுகிறது போஸ்ட் ஆபீஸ்
இமெயில், இண்டர்நெட் என தகவல் தொழில்நுட்பம் எங்கேயோ சென்றுவிட்ட நிலையில் கடிதம் அனுப்புவது என்பது கிட்டத்தட்ட நின்றேவிட்டது. ஒரிரண்டு கடிதங்களும் தனியார் கொரியர் மூலம் அனுப்பப்படுவதால் பெரும்பாலான தபால் நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
இதன்படி பருப்பு உள்பட பலகாரங்களுக்கு தேவையான மளிகைப்பொருட்களை தபால் நிலையங்களில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு நிறுவனங்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் மத்திய அரசின் விற்னை நிலையங்கள் அதிகளவில் இல்லாததால் தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு இன்று மத்திய விவாதிக்க நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.