கனநீர் தொழிற்சாலையில் ஸ்டெனோகிராபர்/நர்ஸ் பணியிடங்கள்

download

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் கனநீர் தொழிற்சாலையில் நர்ஸ், பார்மசிஸ்ட், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Nurse/A (Group Non-gazetted):

3 இடங்கள் பொது (பெண்)-1, பொது (ஆண்)-2.

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயது வரம்பு:

30க்குள்.

தகுதி:

பெண்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Nursing & Mid wifery பாடத்தில் 3 வருட டிப்ளமோ முடித்து ஏ கிரேடு நர்ஸாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும். ஆண்கள்: ஏ கிரேடு நர்ஸ் தகுதியுடன் ராணுவ மருத்துவமனைகளில் 3 வருட நர்ஸ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Scientific Assistant/B (Library) Group (Non-gazetted).

1 இடம் (ஒபிசி).

வயது வரம்பு:

30க்குள்.

தகுதி:

நூலக அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது ஏதாவதொரு பிஎஸ்சி பட்டப்படிப்புடன் நூலக அறிவியல் பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3. Pharmacist/C (Group B Non-Gazetted):

1 இடம் (ஒபிசி).

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயது:

30க்குள்.

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட D. Pharm படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தது 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில பார்மஸி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

4. Stenographer Grade-II (Group B, Non-gazetted):

3 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயது வரம்பு:

27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

5. Stenographer Grade III (Group C, Non-gazetted):

21 இடங்கள் (பொது-11, ஒபிசி-7, எஸ்சி-1, எஸ்டி-2).

சம்பளம்:

ரூ.5,200-20,200.

வயது வரம்பு:

30க்குள்.

தகுதி:

குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

6. Upper Division Clerk:

13 இடங்கள் (பொது-10, ஒபிசி-2, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.5,200-20,200.

வயது வரம்பு:

27க்குள்.

தகுதி:

கலை/அறிவியல்/ வணிகவியல் பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு குறைந்தது 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

7. Driver (Ordinary Grade):

1 இடம் (ஒபிசி):

சம்பளம்:

ரூ.5,200-20,200

வயது:

27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 1.8.2015 தேதிப்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்பவும் சலுகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.20/- இதை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

www.hwb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2015.

Leave a Reply