ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை குறித்து நிர்வாகம் கூறுவது என்ன?

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை குறித்து நிர்வாகம் கூறுவது என்ன?

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக போராடி வந்தா நிலையில் நேற்று மாலை அந்த ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துகுடி கலெக்டர் ஆலைக்கு சீல் வைத்தார். இதனால் இந்த போராட்டம் நீண்ட காலத்திற்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆலையை மூடும் அரசாணை குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு. 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்’ என்று கூறியுள்ளது.

மேலும் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தமிழக அரசு தகுந்த ஆதாரங்களுடன் வாதாடினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தரா தீர்வு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply