ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது எங்கள் கையில் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது எங்கள் கையில் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமத்தை தமிழக அரசு சமீபத்தில் ரத்து செய்ததோடு, மக்களை பாதிக்கும் எந்த நிறுவனத்தையும் தொடர தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கையில் இல்லை என கைவிரித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலை உரிமத்தை மாசுகட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசு கையில் இல்லை.

பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகத்தினர் உத்தரவு பெற்றுள்ளனர். அந்த வழிமுறைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கும். ‘உரிமம் ரத்து செய்துள்ளது ஏமாற்று வேலை’ என வைகோ கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. அவர் எல்லாம் தெரிந்து கொண்டே அரசியலுக்காக பேசுகிறார். தலைவருக்குரிய குணங்கள் அவரிடம் இல்லை. அவருக்கு ஏதோ ஒன்று ஆகிவிட்டது. அவர் மனநிலையை சரி செய்து கொண்டால் நல்லது. மக்களை பாதிக்கும் பிரச்னையில் அரசு வேடிக்கை பார்க்காது.இவ்வாறு கூறினார்.

Leave a Reply