13 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பிகாசோ ஓவியம் மீட்பு.

Stolen Picassoஉலகப்புகழ் பெற்ற பிகாசோ ஓவியம் ஒன்று ஒன்று கடந்த 2001ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. தற்போது  திருடப்பட்ட அந்த பிகாசோவின் ஓவியம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் மதிப்பு பல கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

1911-ம் ஆண்டில் பிகாசோ வரைந்த இந்த ஓவியம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள அருங் காட்சியகத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்த ஓவியம் மர்ம நபர்கள் கொண்ட ஒரு கும்பலால் திருடப்பட்டது. ஓவியம் திருடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் எந்தவித துப்பும் கிடைக்காததால் பிரான்ஸ் போலீஸாரால் ஓவியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த டிசம்பரில் பெல்ஜியம் நாட்டில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. அந்த பார்சலை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் சந்தேகப்பட்டு சோதனை நடத்தியபோது, அது திருடப்பட்ட பிகாசோவின் ஓவியம் என்பதும் தெரியவந்தது

பெல்ஜியத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அந்த ஓவியம் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தலில் தொடர் புடையவர்கள் குறித்து அமெரிக்க போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply