லண்டன்:உணவு வகைகளில் உப்பை குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேல்ட்கான்ஸர் ரிசர்ச்ஃபண்டின்(டபிள்யூ.சி.ஆர்.எஃப்) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு நிறைய கலந்த உணவுகள் வயிற்று புற்றுநோய்க்கு காரணமாவதுடன், இரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றை தோற்றுவிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
உப்பின் உபயோகம் தினமும் 6 கிராமுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுல் புற்றுநோய் பாதித்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவுச் செய்கின்றனர். இவர்களில் 15 சதவீதம் பேராவது உப்பை கட்டுப்படுத்தியிருந்தால் புற்றுநோய் வராமல் தடுத்திருக்கலாம் என டபிள்யூ.சி.ஆர்.எஃப் கூறுகிறது.
உப்பின் அளவை உணவுப் பொருட்களின் கவரில் குறிப்பிட வேண்டும் என கூறுவது இதன் அடிப்படையிலாகும் என கேன்ஸர் ரிசர்ச் சென்டர் உறுப்பினர் லூஸி போய்ட் கூறுகிறார்.