போர்த்துகீசிய நாட்டில் சிறுவன் ஒருவனின் தொப்புளின் உள்ளே சுண்டெலி ஒன்று புகுந்து கொண்டதாகவும், அதை வெளியே எடுக்க மருத்துவர்கள் போராடியதையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
போர்த்துக்கீசிய நாட்டில் சிறுவன் ஒருவன் தூங்கும்போது அவனது தொப்புளில் சுண்டெலி ஒன்று புகுந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அந்த சிறுவன், உடனே அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டான். உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த சிறுவனின் தொப்புளில் கைவிரலை நுழைத்து மருத்துவர் ஒருவர் சுண்டெலியை வெளியே எடுக்கின்றார். அவருக்கு உதவியாக நர்ஸ் ஒருவர் தொப்புளில் அவ்வப்பொது தண்ணீரை ஊற்றுகிறார்.
இந்த வீடியோ கடந்த வாரம் இணையதளத்தில் வெளியாகி, தற்போது உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஒருசிலர் இது உண்மையான சம்பவம் இல்லை என்றும், கேமரா டிரிக் என்றும் கூறுகின்றனர். நமது சென்னை டுடே வாசகர்களுக்காக இந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம். இந்த வீடியோ பார்த்து இது உண்மைதானா? என்பதை கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
https://www.youtube.com/watch?v=gQpoXWtcwEc