யுவராஜ்சிங் வீடு மீது கல்வீச்சு. ஹர்பஜன்சிங் கண்டனம்

12

20 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் இந்திய இலங்கை அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் வங்கதேசத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் யுவராஜ்சிங் மிக மோசமாக விளையாடியதால் யுவராஜ்சிங் மீது கடும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதனிடையே யுவராஜ்சிங்கின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்துள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் கடைசி ஐந்து ஓவர்களில் அடித்து விளையாட வேண்டிய யுவராஜ்சிங் மிகவும் நிதானமாக 21 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2007–ம் ஆண்டு உலக கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்த யுவராஜ்சிங் இந்த உலககோப்பையில் மிகவும் மோசமாக விளையாடியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

யுவராஜ்சிங் ஆட்டத்தை கண்டு எரிச்சலும், ஆத்திரமும் அடைந்த சில ரசிகர்கள் இந்திய அணி தோல்விக்கு யுவராஜ்சிங் தான் காரணம் என்று கூறி சண்டிகாரில் உள்ள யுவராஜ்சிங் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் யுவராஜ்சிங் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய வீட்டிற்கு தற்போது போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.;

யுவராஜ்சிங் மீதான் தாக்குதலுக்கு முனனாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

Leave a Reply