சீனா குறித்த கருத்தை ஒரே மாதத்தில் மாற்றி கொண்ட இந்திய விமான படைத்தளபதி

சீனா குறித்த கருத்தை ஒரே மாதத்தில் மாற்றி கொண்ட இந்திய விமான படைத்தளபதி

ARUPRAHAஒருசில ஆசிய நாடுகளுடன் இணைந்து சீனா பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை என ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து கூறிய விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா, தற்போது திடீரென சீனாவை எதிரியாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என முற்றிலும் மாறுபட்ட கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா நேற்று மேற்குவங்க மாநிலம் ஹாசிமாராவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இனிமேலும் சீனாவை எதிரியாகப் பார்க்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். நாம் ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். இரு நாடுகளுக்கும் பொதுவான நோக்கங்களும், நலன்களும் உள்ளன. இந்தியா, சீனா இடையே பிரச்னைகள் உள்ளன. முக்கியமாக எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

எனினும், இப்போதைய சூழ்நிலையில் ராஜீயரீதியாக நாம் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். நமது பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்காக நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புடனும், புரிந்து கொண்டும் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இரு நாடுகளும் ஒரே நேரத்தில் பொருளாதாரச் சக்தியாகவும், ராணுவ பலம் பொருந்திய சக்திகளாகவும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் நட்பை உறுதிப்படுத்துவதான் சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஒரே மாதத்தில் அவருடைய கருத்து முற்றிலும் மாறுபட என்ன காரணம் என சமூகவலைத்தளங்களில் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

English Summary: IAF Chief Arup Raha– “We’re in the same region,we have common interests. I don’t think we shd look at them as adversaries now

Leave a Reply