கற்சிலைக்கு காட்டும் கருணை கூட உயிருள்ள விவசாயிகளுக்கு இல்லையா?

கற்சிலைக்கு காட்டும் கருணை கூட உயிருள்ள விவசாயிகளுக்கு இல்லையா?

தமிழக அரசையும், தமிழக மக்களையும் தொடர்ந்து மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்து வருவது, தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நேற்று பதவியேற்ற உபி அரசின் வேண்டுகோளின்படி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த மத்திய அரசு, அதே கோரிக்கைக்காக இரண்டு வாரங்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது ஏன்?

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில், அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு மிக பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்திற்கு 3,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.2,500 கோடியை அதாவது முக்கால் வாசி பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் தமிழகத்தின் வறட்சி நிதியாக தமிழக முதல்வர் ரூ.39,595 கோடி வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.1748.28 கோடி மட்டும் அதாவது சுமார் 5% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. கல்சிலைக்கு 75% ஒதுக்கிய மத்திய அரசு உயிருள்ள விவசாயிகளுக்கு வெறும் 5% ஒதுக்கியது எந்த வகையில் நியாயம் என்பதே தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது.

Leave a Reply