வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். 3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்
* ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து நன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.
* சருமத்துளையில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க, அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன் 1 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளாரை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவும் போது, மசாஜ் செய்து கொண்டே கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் நன்கு தெளிவாக, பளிச்சென்று காணப்படும்.