சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலத்தில் உள்ள பள்ளிக்கரணை 189வது வட்டத்தில் உள்ள காமாட்சி நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மாநகராட்சி வட்ட அலுவலகம் உள்ள பஜார் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள். மாநகராட்சி அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.