ஆ.ராசாவுக்கு எதிராக வலுவான வேட்பாளர். ஆம் ஆத்மி முடிவு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 350 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் நாடு முழுவதும் 350 வேட்பாளர்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தவுள்ளதாவும், குற்றப்பின்னணி மற்றும் ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 2ஜி ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இந்தியாவில் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 162 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகளும், 73 எம்.பிக்கள் மீது கடுமையான குற்றவழக்குகளும் உள்ளது.

இவர்களில் எத்தனை பேர் மீண்டும் போட்டியிட்டாலும், அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டத்தின் நடந்த இந்த தகவல்களை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார்.

Leave a Reply