இன்றைய தேதியில் ஆன்லைன் மூலம் பல வேலைகளைச் சுலபமாகச் செய்வது அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்தபடி இ.பி. பில் கட்டுவது முதல் ரயில் டிக்கெட், செல்போன் வாங்குவது வரை எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடிகிறது. ஆனாலும், ஆன்லைன் வசதியை பயன்படுத்த பலரும் தயங்கவே செய்கிறார்கள். காரணம், நம் அக்கவுன்ட் களவு போய்விடுமோ என்கிற அச்சம்தான்.
நம்மில் பெரும்பாலோர் ஆன்லைன் பாஸ்வேர்டு அமைத்துக் கொள்ளும்போது 123456 அல்லது abcde அல்லது நம் பெயர் என்கிற ரீதியிலேயே அமைத்துக் கொள்கிறோம். இதனால் நம் பாஸ்வேர்டுகளை எளிதில் உடைத்து, நம் ஆன்லைன் அக்கவுன்டுக்குள் புகுந்து, பணத்தைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் ‘நெட்’ கொள்ளையர்கள்.
பலவீனமான பாஸ்வேர்டுகள் மோசடிக்கான கதவை எளிதில் திறந்துவிடுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி சேனல் வெரிசன் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில், ‘சுலபமாக ஊகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை வைத்திருப்பதே ஆன்லைன் மோசடி பிரச்னைக்கு மூல காரணம் என்கிறது.
”பாஸ்வேர்டு என்பது நினைவில் நிற்பதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.
நம்மவர்கள் நினைவில் நிற்பது போல் சுலபமான பாஸ்வேர்டை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அது பாதுகாப்பானதாக இல்லை என்பதே பெரிய குறைபாடு.
ஆன்லைன் செக்யூரிட்டியை பலப்படுத்த என்ன செய்யலாம் என செக்யூரிட்டி ஆராய்ச்சி யாளர்கள் மூளையைப் போட்டு குழப்பியதன் விளைவு, நம் பாஸ்வேர்டு வலிமையாக இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.
வலிமையான பாஸ்வேர்டு என்றால்..? ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத எழுத்துக் கள் மற்றும் எண் களாக இருப்பதுதான் வலிமை யான பாஸ்வேர்டு. இந்த பாஸ்வேர்ட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால், எந்த கொம்பனாலும் உங்கள் பாஸ்வேர்ட்டை உடைக்க முடியாது” என்கிறார்கள் அவர்கள்.
எக்ஸ்கியூஸ்மீ, உங்களின் பாஸ்வேர்டு ஸ்ட்ராங்கா இருக்கா?