ஜப்பானில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாகவும், இந்த பூகம்பம் காரணமாக ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று அதிகாலை சிறிய அளவில் சுனாமி ஜப்பான் கடற்கரை பகுதியில் ஏற்பட்டதாகவும், இந்த சுனாமியின் அளவு அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் கடலோர பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 600கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவர வில்லை என்ரு கூறப்படுகிறது.
ஜப்பான் கடலின் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தால் ஜப்பானில் இயங்கி வரும் அணு உலைகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன