வலிமையான டேப்லெட்

toughpad_2312491h

மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் ஜப்பானின் பானசோனிக் நிறுவனம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் கையடக்க டேப்லெட் கருவிகளைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது புதிய 7 அங்குல டேப்லெட் ஒன்றை சென்னையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு `டஃப்பேட்’ என்று பெயரிட்டுள்ளது இந்த நிறுவனம்.

பெயருக்கு ஏற்றார்போல இந்த டேப்லெட்டின் உழைப்பும் இருக்கிறது. 540 கிராம் எடை கொண்ட இந்த டேப்லெட் பேட்டரிகள் 14 மணிநேரம் நீடிக்குமாம். மேலும் இந்த டேப்லெட்டின் தொடுதிரை கடின உராய்விலும் செயல்படுகிறது. கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டுகூட இதை இயக்கலாம். மேலும் நீர்புகா தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைனஸ் 24 டிகிரி குளிர் நிலையிலும் இந்த டேப்லெட் இயங்கும்.

நேரடியாக சில்லறை வர்த்தகத்துக்கு இந்த டேப்லெட் விற்பனைக்கு வரவில்லை. நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப தயாரித்து விற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. கீழே விழுந்தாலும் பாதிப்படையாத வகையில் உறுதியான கட்டமைப்புடன் இந்த டேப்லெட் உள்ளது. குவார்ட் கோர் இன்டெல் செலரான் பிராசஸரைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்கு தளத்தைக் கொண்டது.

Leave a Reply