சென்னை மெரினாவில் மீண்டும் ஒரு எழுச்சி போராட்டம். தமிழக அரசு அதிர்ச்சி

சென்னை மெரினாவில் மீண்டும் ஒரு எழுச்சி போராட்டம். தமிழக அரசு அதிர்ச்சி


சென்னை மெரீனாவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க முடியாது. இந்தப் போராட்டத்தை அடுத்து தற்போது டெல்லி, ஜந்தர் மந்தரில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் போராடுவதற்காக சென்னை மெரினாவில் நேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கூடியதுபோல் கூடுமாறு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு நேற்று மெரினாவில் கூடிய மாணவர்களை கைது செய்தது. அதேபோல் இன்றும் கூடிய 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் கூடுவதைத் தடுக்க மெரினாவின் காந்தி சிலையில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் மாணவர்கள், இளைஞர்கள் கூடி வருகின்றனர். பாதுகாப்பை முன்னிட்டு மெரினா பீச்சில் இருந்த கடைகள் நேற்று அகற்றப்பட்டன.

Leave a Reply