ஒருவரியை மறந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய திமுக முன்னாள் அமைச்சர்
தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது அதற்கு எழுந்து நிற்கவில்லை என விஜயேந்திரர் மீது திடீர் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். விஜயேந்திரர் செய்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றாலும் வைரமுத்து-ஆண்டாள் பிரச்சனை போல் இந்த பிரச்சனையையும் பெரிதாக்கி அதில் குளிர் காய வேண்டும் என்பதே பல அரசியல்வாதிகளின் நோக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், விஜயேந்திரருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து இந்த நிகழ்ச்சியை தமிழ்த்தாய் வாழ்த்தோடு முடித்து கொள்வோம் என்று கூறி அவரே தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடினார்
ஆனால் அவர் பாடிய அந்த பாடலில் ‘அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற என்ற ஒருவரியை அவ்ர் மறந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது தற்போது சமூக வலைத்தள பயனாளிகளின் கண்டனத்தை பெற்று வருகிறது.
'அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற ….' ஒருவரியை மறந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலக்ஷ்மி pic.twitter.com/4OGn6CkXNE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 26, 2018