ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

Subramanian-Swamy-jayalalitha-imageசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 27ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக ஐகோர்ட் சிறப்பு நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு வரும் 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply