ராணுவ படையின் சிறப்பு அதிகார சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, ப.சிதம்பரத்தின் இந்த கோரிக்கை வடிகட்டிய முட்டாள்தனமானது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ”வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ராணுவ படையின் சிறப்பு அதிகார சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள கோரிக்கை முற்றிலும் முன்னாள்தனமானது.
சிதம்பரத்தின் ஆலோசனைப்படி மாற்றம் கொண்டுவந்தால் அது தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் சாதகமாகத்தான் அமைந்து விடும். நாங்கள் ராணுவத்தை பலப்படுத்தவே முயற்சித்து வருகிறோம். ராணுவ அதிகார சட்டத்தை நீர்த்து போக விடமாட்டோம். அதை ஒடுக்க நீங்கள் சக்தியை பயன்படுத்தினால், நாங்கள் 10 மடங்கு சக்தி கொண்டு அதனை ஒடுக்குவோம்” எனக் கூறியுள்ளார்.