ஐபிஎல் குறித்து திடீரென வழக்கு பதிவு செய்த சுப்பிரமணியம் சுவாமி

ஐபிஎல் குறித்து திடீரென வழக்கு பதிவு செய்த சுப்பிரமணியம் சுவாமி

ஐபிஎல், இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் திருவிழா. இந்தியாவில், கோடை விடுமுறை சமயத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துள்ள இந்தத் திருவிழாவில், சர்ச்சைகளும் முறைகேடுகளும் ஏராளம்.

முதலாவது ஐபிஎல் தொடர் முதல் 10-வது ஐபிஎல் தொடர் வரை சோனிமேக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றது. 10-வது ஐபிஎல் போட்டித் தொடர், கடந்த மே மாதம் முடிவடைந்ததையடுத்து புதிய உரிமைக்கான டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முறை, கடந்த முறைபோல இல்லாமல், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். ‘ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக இன்று ஆஜராகி, தனது ஐபிஎல் வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸரை விவோ நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply