சுப்பிரமணிய சுவாமியின் புதிய இந்து அமைப்பு விராட் ஹிந்துஸ்தான் சங்கம்’ ஆரம்பம்.

Subramanian-Swamyபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான சுப்பிரமணியன் சுவாமி “விராட் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்னும் புதிய இந்து அமைப்பு ஒன்றை நேற்று முதல் தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த அமைப்பானது அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட இந்துத்தவ கொள்கைகளை, இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பாடுபடும்.

அமைப்பின் சார்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்னைக்கு, முன்னுரிமை கொடுக்கப்படும். 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இவ்விஷயத்தில், தீவிரம் காட்டுவோம்.

சரயு நதிக்கருகே மசூதி கட்டுவதற்காக, வக்ஃப் வாரியத்துக்கு நிலம் ஒதுக்க வேண்டும்; எஞ்சிய இடங்கள், ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவோம். இதுதொடர்பான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையடையும் என்று நம்புகிறோம்.

இந்த அமைப்பானது, சங் பரிவார் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தேவைப்படும் நபர்கள் அடங்கிய பட்டியலை, பாஜகவிடம் வழங்கும். இந்த அமைப்பில், தங்கள் மூதாதையர்கள் ஹிந்துக்கள் என ஒப்புக்கொள்ளும் முஸ்லீம்களும், பிற இந்தியர்களும் சேரலாம்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Leave a Reply