பிராமணர்களும் கற்றறிந்த புலவர்களும் சொல்வதை கேட்டுத்தான் அந்த காலத்தில் ராஜாக்கள் ஆட்சி புரிந்தனர். அதுபோல நான் சொல்வதை கேட்டு மோடி ஆட்சி செய்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நேற்று ஒரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சுப்பிரமணிய சுவாமி, ‘புதிய அமைச்சரவை விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் இந்த விழாவில் ஏற்கனவே கலந்து கொள்ள நான் உறுதிமொழி கொடுத்திருந்ததால், அமைச்சரவை பதவி விழாவை புறக்கணித்து இங்கு வந்துள்ளேன்.
எனக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து எவ்வித வருத்தமும் இல்லை. ஒரு துறையின் அமைச்சராக மாறினால் அந்த துறைக்கு மட்டுமே நான் அமைச்சராக இருக்க முடியும். ஆனால் தற்போது நான் அனைத்து துறைகளை பற்றியும் பிரதமரிடம் பேசுகிறேன். மன்னர்கள் காலத்தில் கற்றறிந்தவர்களின் அறிவுரையின்படிதான் ஆட்சி நடந்தது போல் தற்போது என்னை போன்றவர்கள் சொல்வதை மோடி கேட்டு ஆட்சி செய்கிறார்’ என்று அவர் கூறியுள்ளார்.