இந்தியாவின் பாதுகாப்பிற்கு உதவி செய்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா. சுப்பிரமணியம் சுவாமி

subramaniyam swamyசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற காரணமாக இருந்த சுப்பிரமணியம் சுவாமி, நேற்று விடுத்த ஒரு அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா விஷயத்தில் சுப்பிரமணியம் சுவாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழக மக்கள் தமிழினத்தை கொன்று குவித்த ஒரு துரோகிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் தமிழக மக்கள் கடும் ஆத்திரத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதுதொடர்பாக மோடிக்கு சுப்பிரமணியம் சுவாமி எழுதிய ஒரு கடிதத்தில், ”விடுதலைப்புலிகளை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்சே பெரும் உதவி செய்துள்ளார்.

எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கவுரவிக்க வேண்டும்” என பிரதமரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ”நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply