மாறன் சகோதரர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது. சுப்பிரமணியன் சுவாமி
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தயாநிதி மாறன், ‘இந்திய நீதித்துறை மீது நான் வைத்திருந்த நம்பிக்கை நிரூபணமாகியுள்ளதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த திமுகவினர் உள்பட அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்த தீர்ப்பு மாறன் சகோதரர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது எனக் கருதமுடியாது என்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக தாம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும், அந்த வழக்கில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.