கலாநிதி மாறன் மீது சுப்பிரமணியன் சுவாமி கூறிய புதிய குற்றச்சாட்டு.

swamyஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள கலாநிதிமாறன், அந்த வழக்கின் பிடி இறுகுவதை அடுத்து இக்கட்டான நிலையில் இருக்கின்றார். இந்நிலையில் மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டை பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள ஒரு கடிதத்தில் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கை மாறிய விவகாரத்தை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 58.46 சதவிகித பங்குகள் கலாநிதி மாறனிடமிருந்து அஜய் சிங்குக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான விலை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது என அதில் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முரண்பாடான விலை, கம்பெனிகள் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க பங்குச் சந்தை வழிகாட்டு ஆணையமான செபி உருவாக்கியிருந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

Leave a Reply