சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சுவாமி புதிய மனு. ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் திடீர் திருப்பம்.

subramanian swamyசுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு  நாளை விசாரணைக்கு வரும் நிலையில்,இன்று  சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் விஷயத்தில் தன்னுடைய கருத்தை கேட்க வேண்டும் என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. அதேபோல் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் சுதாகரனுக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா உள்பட மூவரின் ஜாமீன் மனு  கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ள நிலையில், சுப்பிரமணியசாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை  இன்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ”ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தாம் மனுதாரர் என்பதால் தம்முடைய கருத்தையும் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply