பாகிஸ்தானில் எந்த வலிமையும் இல்லாத பொம்மை அரசுதான் நடக்கின்றது. சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தானில் எந்த வலிமையும் இல்லாத பொம்மை அரசுதான் நடக்கின்றது. சுப்பிரமணியன் சுவாமி
subramanian swamy
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இன்னொரு முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிளந்துவிடும் என  பா.ஜ.க.வின் முன்னணி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எச்சரித்து விடுத்து வருகிறது. காஷ்மீர் குறித்த விவாதத்துடன் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதால், தங்களுக்கு எதிரான போரை இந்தியா தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் மிஎச்சரிக்கை விடுத்து வருகிறார். மேலும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

பாகிஸ்தானிடம் எந்த ஒரு வலிமையும் இல்லை. அது விரக்தியடைந்து போய் பலவீனமானதாக இருக்கிறது. அங்கே இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு பொம்மை அரசுதான். பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுடன் யுத்தத்தை நடத்த விரும்பினால் நாமும் அதற்கு தயார்தான். ஆனால் நாம் எந்த ஒரு நாட்டுடனும் போர் பிரகடனத்தை வெளியிட்டதில்லை.

நம்மை பிறநாடுகள்தான் போரில் வலிந்து தள்ளியிருக்கின்றன. ஏற்கெனவே நடந்த ஒரு யுத்தத்தில் பாகிஸ்தான் 2 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது. இனி ஒரு முறை இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் நடத்தினால் அந்த நாடு 4 நாடுகளாக பிளவுபடுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Leave a Reply