அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சுவாமி புதிய மனு
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வழக்கு ஒன்று ஏற்கனவே நடந்து வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தற்போது புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அயோத்தியில் உடனடியாக ராமர்கோவில் கட்ட அனுமதித்து உத்தரவிட அவர் கோரியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ”சாலை அமைப்பது போன்ற பொதுப்பணிகளை மேற்கொள்வதற்காக மசூதிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் ஓரிடத்தில் கோயில் கட்டப்பட்டுவிட்டால் அதன் பிறகு அதில் கைவைக்கும் வழக்கம் கிடையாது. எனவே, ராமஜென்ம பூமியில் முன்பு ராமர் கோயில் இருந்தது உண்மை. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
சுவாமியின் இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.எஸ்.தாக்குர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவை ஏற்கனவே அயோத்தி விவகாரத்தை விசாரணை செய்து வரும் அமர்வுக்கு இந்த மனுவை மாற்றிட உத்தரவிட்டார்.