ஸ்டாலின் முதலமைச்சர், விஜயகாந்த் துணை முதலமைச்சர். சுப்பிரமணிய சுவாமி மெகா திட்டம் பலிக்குமா?
தமிழக தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் முதல்கட்டமாக கூட்டணி அமைப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணையும் சூழல் கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது பாஜக, திமுகவுடன் இணையும் சூழ்நிலை மாறி வருகிறது. இதை உறுதுப்படுத்துவதைபோல் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, “தி.மு.க. மற்றும் தேமுதிக ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் சேர வேண்டும் என தனது டுவிட்டரில் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் ஒப்புதலுடன் தான் சுவாமி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் இருந்த விஜயகாந்த், வரும் 5-ம் தேதி டெல்லி சென்று, பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக+பாஜக+தேமுதிக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் சுப்பிரமணிய சுவாமி தனது டூவிட்டர் இணைய தளத்தில், ”கருணாநிதி முதலமைச்சர் பதவியை நிராகரிப்பார் என நான் நம்புகிறேன். அவர் ஸ்டாலினை தலைவராக அறிவிக்க வேண்டும். மேலும், தி.மு.க.வும், விஜயகாந்த்தும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்த கூட்டணி அமைந்தால் ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராகவும், விஜயகாந்த் துணை முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.