ஜெயலலிதா ஜாமீன் மனு விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் பல்டி ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது நான் எதிர்பார்த்ததுதான். சட்டத்தின் ஆழம் தெரியாமலும், தீர்ப்பு குறித்த முக்கிய அம்சங்கள் தெரியாமலும் அதிமுகவினர் ஆட்டம் போடுகின்றானர். ஜாமீன் மனு நிராகரிக்கப்படும் என்பது நான் எதிர்பார்த்தது தான்.
காலையில் எனது ட்விட்டரிலும் நான் இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞர் பவானிசிங் அவர்களுக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர் திடீரென பல்டி அடிதததற்கு என்ன காரணம் என்பதை அவர்தான் விளக்கவேண்டும். உண்மையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர் கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாதது எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனினும், இந்த விவகாரத்தில் நீதிபதி சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கர்நாடக நீதிமன்றம் மிக சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.